இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும்: உலக வங்கி அறிக்கை

DIN

வாஷிங்டன்: 2022- 23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது, இது அதன் முந்தை ஜூன் 2022 கணிப்புகளை விட 1 சதவீதம் குறைவு என்றும், இதற்கு சர்வதேச சூழல் மோசமடைந்து வருவதே காரணம் எனவும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டத்திற்கு முன்னதாக வியாழக்கிழமை தெற்காசிய பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில் உலக நாடுகளை விட இந்தியா சிறப்பான வளர்ச்சியை கண்டு வருவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 சதவீதம் குறைத்து 6.5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் மோசமடைந்து வருவதும், நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகளால் தனியார் முதலீட்டு வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளதன் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து அறிவித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது மூன்றாவது முறையாகும். 

தெற்காசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. கரோனா பெருந்தொற்றின் முதல் கட்டத்தின் போது, இந்தியா கடுமையான பொருளாதார தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளது. 

இந்தியாவுக்கு, பெரிய அளவில் வெளிநாட்டுக் கடன்கள் இல்லை, அந்தவிதத்தில் எந்தப் பிரச்னையும் வரவில்லை, விவேகமான பணக் கொள்கை அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

முந்தைய ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பொருளாதாரம் சேவைத் துறையில் குறிப்பாக சேவை ஏற்றுமதியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்தியா உள்பட பல நாடுகளில் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைவது இதற்கு காரணம். இந்தியா ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும் என்றார்.

"அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச சூழல் மோசமடைந்து வருவதே இதற்குக் காரணம்" என்று அவர் கூறினார்.

முக்கியமாக அதிக வருவாய் உள்ள நாடுகளின் உண்மையான பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைவது, நிதிச் சந்தைகளை இறுக்கமாக்கும் உலகளாவிய பணவியல் கொள்கையும் முக்கிய காரணம். இது பல வளரும் நாடுகளில் மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது,

ஆனால், இது முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வளரும் நாடுகளில் வட்டி விகிதங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது. உலகளாவிய அளவில் தேவை குறைந்து வருவது நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும். இந்திய பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியால் மட்டுமே வளர்ச்சி உள்ளது. இந்தியா சில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

"நாம் ஒப்பீட்டளவில் சாதகமான வளர்ச்சி விகிதத்தைப் பார்த்தாலும், இது பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியால் மட்டுமே ஆதரிக்கப்படும் வளர்ச்சியாகும். ஆனால் அது மிகவும் பரந்த தளத்தில் இருந்து வரவில்லை என்றால், அந்த வளர்ச்சி விகிதம் ஒப்பீட்டளவில் சிறியது. பொருளாதாரத்தின் ஒரு பகுதியானது அனைத்து குடும்பங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்காது." என்று அவர் கூறினார்.

"எனவே, இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இது மற்ற சில நாடுகளைப் போல பாதிக்கப்படக்கூடியது அல்ல. ஆனால் அது இன்னும் கடுமையான காலநிலையில் உள்ளது. இந்தியா அதிக பொருள்களின் விலையை வழிநடத்த வேண்டும்" என்று கூறியவர், தொழிலாளர் சந்தையில் 20 சதவீதம் பெண்கள் மட்டுமே பங்கேற்பதாக சுட்டிக்காட்டிய டிம்மர், சமூக பாதுகாப்பு முறையை விரிவுபடுத்துதல், மக்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகின் பிற பகுதிகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது, இந்திய அரசாங்கம் கரோனா நெருக்கடி காலத்தில் மிகவும் தீவிரமாக சிறப்பாக பணியாற்றியது.

"டிஜிட்டல் முறைகளை கையாள்வதில் இந்திய அரசாங்கம் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம்," என்ற அவர், கரோனா பெருந்தொற்று பாதிப்பு, உக்ரைனில் போர் மற்றும் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு என ஒன்றன் பின் ஒன்றாக வரும் நிலையில், சுற்றுச்சூழல் பேரழிவுகளும் கூடவே தொடர்வதால் பல நாடுகள் தங்கள் பொருளாதாரத்தில் சரிவை சந்தித்து வருகின்றன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT