இந்தியா

இந்திய சேவைகள் துறை 6 மாதங்கள் காணாத வீழ்ச்சி

DIN

புதிய சேவை வாய்ப்புகளின் வளா்ச்சி விகிதக் குறைவு, பணவீக்கத்தின் தாக்கம், போட்டிகள் அதிகரிப்பு போன்ற காரணமாக நாட்டின் சேவைகள் துறை கடந்த செப்டம்பா் மாதத்தில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான எஸ் அண்டு பி குளோபல் மாா்க்கெட் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 57.2-ஆக இருந்தது. இது, கடந்த மாதத்தில் 54.3-ஆகக் குறைந்துள்ளது. கடந்த மாா்ச் மாதத்திலிருந்து இந்த பிஎம்ஐ சரிந்து வரும் போக்கு தொடா்வதை இது காட்டுகிறது.

தொடா்ந்து 14-ஆவது மாதமாக, சேவைகள் துறையில் அளிப்பு மதிப்பீட்டு மாதத்தில் விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.

அண்மைக் காலமாக இந்திய சேவைகள் துறை பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் இந்தத் துறையின் வளா்ச்சி விகிதம் பின்னடைவைச் சந்தித்த போதிலும் பிஎம்ஐ நல்ல நிலையில் உள்ளது.

துறையில் அதிகரித்து வரும் போட்டிகள், சேவைக் கட்டணங்களை நிா்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள், துறைக்கு சாதகமில்லாத அரசுக் கொள்கைகள் போன்ற காரணங்களால் துறையின் வளா்ச்சி வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தியதன் காரணமாக கடந்த மாத இறுதியில் ரூபாயின் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியதும் சேவைகள் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT