இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் சிறுமி உட்பட 4 பேர் காயம்

7th Oct 2022 07:11 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 12 வயது சிறுமி உட்பட 4 பேர் காயமடைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “ இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரும் அவர்களது வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென கரடி ஒன்று அவர்கள் வேலை செய்யும் வயலுக்குள் வந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களைத் தாக்கியது.

இதையும் படிக்க: மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ADVERTISEMENT

அதன் பின்னர் கிராம மக்கள் கரடியினை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் சைரா (12 வயது), அஞ்சும் பசீர் (18 வயது), அப்தும் மஜீத் (32 வயது) மற்றும் ஷகீனா (30 வயது) ஆகியோர் கரடியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது.” என்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT