இந்தியா

அண்டை மாநிலங்கள் தில்லியில் பேருந்துகளை இயக்க வேண்டாம் எனும் தில்லி அரசு, காரணம் என்ன தெரியுமா?

DIN

ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பழைய பேருந்துகளை தலைநகர் தில்லிக்குள் இயக்க வேண்டாம் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

பழைய பேருந்துகள் தவிர உரிய மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்களும் தில்லிக்குள் இயக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்ற மாநில அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்தனர்.

இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “ நாங்கள் அண்டை மாநிலங்களின் பழையப் பேருந்துகளை தில்லிக்குள் இயக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அவர்களிம் தெரிவித்துள்ளோம். அதற்கு முக்கியக் காரணம் தில்லியில் பழைய வாகனங்களால் ஏற்படும் மாசினைக் குறைப்பதே ஆகும். அதேபோல மற்றொரு கோரிக்கையினையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். உரிய மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களும் தலைநகர் தில்லியில் இயக்கக்கூடாது என்பதாகும்.” என்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை தில்லியில் இயக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT