இந்தியா

தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி: பெங்களூரு ஓட்டுநர்களின் புதிய முயற்சி

7th Oct 2022 05:22 PM

ADVERTISEMENT

தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூருவில் வாகன ஓட்டுநர்கள் இணைந்து புதிய செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதிகரித்துவரும் தனியார் வாகனப் பயன்பாடு காரணமாக டாக்ஸி செயலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சொந்த வாகனங்களை வைத்திருக்கும் ஒட்டுநர்களும் தங்களை தனியார் டாக்ஸி செயலியில் பதிந்து வாகனங்களை இயக்கி வருகின்றனர். குறைந்தபட்ச பயன்பாட்டு உத்தரவாதம், வியாபாரப் போட்டி மற்றும் சம்பளம் காரணமாக தனியார் டாக்ஸி செயலிகள் இத்துறையில் கொடி கட்டிப் பறக்கின்றன.

இதையும் படிக்க | தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ல் கூடுகிறது

இந்நிலையில் போதிய வருவாயின்மை காரணமாக பெங்களூரு வாகன ஓட்டுநர்கள் தங்களுக்கென்ற பிரத்யேகமாக வாகன செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

ADVERTISEMENT

பெங்களூரு ஆட்டோ யூனியன் உருவாக்கி வரும் நம்ம யாத்ரி எனும் பெயர் கொண்ட இந்த செயலியானது நவம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. 

தனியார் செயலிகளைப் பொறுத்தவரை ஒரு பயணியிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.100 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் ரூ.60 ஓட்டுநர்களுக்கும், ரூ.40 தனியார் செயலிக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிக்க | அண்டை மாநிலங்கள் தில்லியில் பேருந்துகளை இயக்க வேண்டாம் எனும் தில்லி அரசு, காரணம் என்ன தெரியுமா?

இதற்கு மாற்றாக நம்ம யாத்ரி செயலியில் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் கூடுதலாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட உள்ளதாகவும், 2 கி.மீ. தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கேரள மாநிலத்தில்  மாநில அரசின் சார்பில் சவாரி எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT