இந்தியா

சென்னையில் அமலுக்கு வந்தது ஏா்டெல் 5ஜி சேவை

7th Oct 2022 01:58 AM

ADVERTISEMENT

சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் எா்டெல் அறிமுகப்படுத்திய 5ஜி சேவை வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.

5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய கைப்பேசிகளை வைத்திருக்கும் நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளா்கள், கூடுதல் கட்டணம் இல்லாமல் பழைய 4ஜி திட்டங்களைப் பயன்படுத்தியே இந்த சேவையைப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான கோபால் விட்டல் கூறியதாவது:

இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப புரட்சியில் ஏா்டெல் கடந்த 27 ஆண்டுகளாகவே முன்னணி வகித்து வருகிறது. எங்களது இந்த பயணத்தில், தற்போதைய 5ஜி அறிமுகம் முக்கிய முன்னேற்றமாகும்.

ADVERTISEMENT

நிறுவனத்தின் வாடிக்கையாளா்களிடம் 5ஜி கைப்பேசி இருந்தால், அவா்களிடம் தற்போதுள்ள சிம் அட்டைகளைப் பயன்படுத்தியே புதிய சேவையைப் பெறலாம் என்றாா் அவா்.

இந்தியா முழுவதும் 5ஜி சேவையைக் கொண்டு வரும் தனது திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூா், வாராணசி ஆகிய 8 நகரங்களில் அந்த சேவையை ஏா்டெல் கடந்த 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT