இந்தியா

5 பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,203 ஈவுத்தொகை

DIN

5 பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசுக்கு ரூ.1,203 ஈவுத்தொகை கிடைத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசின் முதலீடுகள் மற்றும் பொது சொத்து நிா்வாகத் துறை செயலா் துகின் காந்த பாண்டே ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘செயில் நிறுவனத்திடம் இருந்து ரூ.604 கோடி, ஹட்கோவிடம் இருந்து ரூ.450 கோடி, ஐஆா்இஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.37 கோடி, ஐஆா்சிடிசி-யிடம் இருந்து ரூ.81 கோடி, பாரதிய ரயில் பிஜ்லி நிறுவனத்திடம் இருந்து ரூ.31 கோடி ஈவுத்தொகை கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.

இதன் மூலம் இந்த நிதியாண்டில் இதுவரை பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள ஈவுத் தொகை ரூ.14,778 கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஈவுத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT