இந்தியா

பிஎஃப் வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? என்ன செய்வது?

6th Oct 2022 03:46 PM

ADVERTISEMENT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில், ஒருவர் செலுத்தியிருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாமல் இருந்தால் அதற்குக் காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கில், வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால், மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தமாகுமே தவிர, யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க.. உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு உள்ளது: எளிதாக அறியலாம்

எந்த பயனாளருக்கும் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படாமல் விடுபடாது. அனைத்து பிஃப் பயனாளர்களுக்கும் உறுதியாக வட்டி வரவு வைக்கப்பட்டுவிடும். ஒரு வேளை, உங்கள் பிஎஃப் கணக்கு அறிக்கையில் வரவு வைக்கப்படாவிட்டால், புதிதாக பிஎஃப் கொண்டு வந்த மென்பொருள் பதிவேற்றப்படாமல் இருக்கலாம் என்று டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

ஆரின் கேமிடல் நிர்வாகியும், இன்போசிஸ் முன்னாள் இயக்குநருமான மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், அன்புக்குரிய இபிஎஃப்ஓ, எங்கே எனது வட்டி? என்று கேள்வி எழுப்பியதோடு, பிரதமர் மோடிக்கும் சுட்டுரைப் பதிவை டேக் செய்து, உடனடியாக மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

அது மட்டுமல்லாமல், இவ்வாறு வட்டி வரவு வைக்கப்படாவிட்டால், ஒருவர் மே மாதத்தில் ஓய்வுபெறுகிறார் என்றால் அவருக்கு எந்த தொகை கிடைக்கும். வட்டி பிறகு அவருக்கு செலுத்தப்படுமா என்றும் மோகன்தாஸ் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT