இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

6th Oct 2022 09:37 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள திரெளபதி மலையின் சிகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில், மலையேற்றப் பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் உள்பட 41 போ் சிக்கிகொண்டனா். இதில் 10 போ் உடல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 4 போ் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையும் படிக்க: தாலி படத்தில் திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்

இந்நிலையில், தற்போது மேலும் 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பனிச்சரிவில் இன்னும் 15 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டவர்களில் 14 பேர் மலையேற்றப் பயிற்சியாளா்கள், இருவர் பயிற்றுநா்கள்   என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT