இந்தியா

திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது: அறிவித்தார் நித்யானந்தா

6th Oct 2022 04:44 PM

ADVERTISEMENT


திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவித்துள்ளார் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொள்ளும் நித்யானந்தா.

பாலியல் புகார், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வரும் நித்யானந்தா, இந்தியாவிலிருந்து தப்பியோடி, தீவு ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி வங்கி, பாஸ்போர்ட் என பலவற்றையும் அறிவித்தார்.

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, நாள்தோறும் ஆன்லைன் மூலமாக தனது பின்தொடர்வோருக்கு சொற்பொழிவுகள் ஆற்றி வந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

ADVERTISEMENT

 

ஒரு நாள் அவர் இறந்தே விட்டார் என்று கூட செய்திகள் வந்தன. பிறகு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றன செய்திகள். ஆனால், நான் சாகவில்லை. சமாதியில்தான் இருக்கிறேன் என்றார் அவரே.

அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் உதவுமாறு இலங்கைக்கு நித்யானந்தா கடிதம் எழுதியிருப்பதாகவும் கூட செய்திகள் வந்தன.

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

இதையெல்லாம் தாண்டி, தற்போது நித்யானந்தாவின் விடியோ ஒன்றை திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா பகிர்ந்துள்ளார். அண்மையில்தான் சூர்யா சிவா திமுகவிலிருந்து விலகி பாஜகவில்இணைந்தார்.

அந்த விடியோவில், பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்யானந்தாவே அறிவித்துள்ளார்.

இந்த விடியோவை பகிர்ந்திருக்கும் திருச்சி சூர்யா சிவா, சுவாமி நித்யானந்தாவால் கைலாசாவின் தர்மரட்சகர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT