இந்தியா

பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க சத்தீஸ்கர் முதல்வரின் புதுமையான முயற்சி

6th Oct 2022 06:55 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சத்தீஸ்கரியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்துள்ளார்.

இந்த சத்தீஸ்கரியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் 14 வகையான பாராம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விடுதலை’ வெளியீடு குறித்து தகவல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்பீர் சிங் உள் விளையாட்டரங்கில் பல்வேறு விதமான போட்டிகளை தொடங்கி வைத்த முதல்வர் பூபேஷ் பாகல் இதனை தெரிவித்தார். மகளிர் கபடி போட்டியினையும் அவர் தொடங்கி வைத்தார். 

ADVERTISEMENT

கபடி போட்டியினை தொடங்கி வைத்து முதல்வர் பூபேஷ் பாகல் பேசியதாவது: “ மாநிலத்தின் முக்கியமான பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அந்தப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.” என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT