இந்தியா

'ராகுலின் நடைப் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' - பசவராஜ் பொம்மை

6th Oct 2022 01:50 PM

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் நடைப் பயணம் தங்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், செப். 30-ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்று வருகிறாா்கள். 

கடந்த இரு நாள்கள் விடுமுறைக்கு பிறகு, மண்டியா மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். இதற்காக சோனியா காந்தி கடந்த 3 ஆம் தேதி மைசூரு வந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் குறித்தும் சோனியா காந்தி பங்கேற்றது குறித்தும் பதில் அளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 

'அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சிக்காகவே உழைக்கிறார்கள். அவர் (சோனியா காந்தி) அரை கி.மீ தூரம் நடந்துள்ளார். பரவாயில்லை. எங்களைப் பொருத்தவரையில் இந்த நடைப்பயணம் எங்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்று கூறியுள்ளார். 

தற்போது கர்நாடகத்தில் 6 பேரணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னதாகவே ஒரு பேரணியை ஆரம்பித்துள்ளார்' என்றார். 

அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியினர், ராகுலின் நடைப்பயணமும் சோனியா காந்தி பங்கேற்றதும் வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று கூறியுள்ளனர். 

இதையும் படிக்க |  ரூ. 10,000 வரை தள்ளுபடியில் ஷாவ்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்! எப்படி?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT