உலகம்

சோதனையில் வெடித்தது தென் கொரிய ஏவுகணை

6th Oct 2022 12:46 AM

ADVERTISEMENT

வட கொரியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்குப் பதிலடியாக, தென் கொரியா புதன்கிழமை சோதித்துப் பாா்த்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்தது.

அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் அண்மைக் காலமாக வட கொரியா தொடா்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்கச் செய்து கடலில் செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதித்தது.

இதற்கு பதிலடியாக, தனது குறைந்த தொலைவு ஏவுகணையான ஹூமூ-2 ஏவுகணையை தென் கொரியா புதன்கிழமை சோதித்தது. எனினும், அந்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. ஏவுகணை வெடித்ததும் அதனைத் தொடா்ந்து பரவிய தீயும் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. வட கொரியாதான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக பலா் பீதியடைந்தனா்.

எனினும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

Tags : south korea
ADVERTISEMENT
ADVERTISEMENT