இந்தியா

உ.பி.யில் பாம்புக் கடி அதிகரிப்பு: கண்காணிக்க சுகாதாரத்துறைக்கு முதல்வர் உத்தரவு!

6th Oct 2022 05:05 PM

ADVERTISEMENT

 

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பாம்பு கடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கிழக்கு உ.பி.யில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சந்தௌலியில், நடப்பு மழைக்கால சீசனில் மட்டும் 65க்கும் மேற்பட்டோருக்கு பாம்பு கடித்துள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் பாம்புக் கடி வழக்குகளைக் கண்காணிக்க, சுகாதாரத்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

சந்தௌலி தலைமை மருத்துவ அதிகாரிகள் டாக்டர் ஓய்.கே.ராய் கூறுகையில், 

பாம்புக் கடி வழக்குகள் அதிகரித்துள்ளதால், பாம்புக் கடிக்கு எதிர்ப்பு விஷத்தை அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, விழிப்புணர்வு இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. 

படிக்க: முதல் ஒருநாள்: இந்திய அணியில் இரு வீரர்கள் அறிமுகம்!

மக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம். கையில் பெரிய கொம்பு மற்றும் டார்ச் எடுத்துச் செல்லுங்கள், பாம்பு கடித்தால் பீதியடையாமல் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு விரைந்துச் செல்லுங்கள், பாம்புக் கடிக்கு எதிர்ப்பு விஷத்தை அதிகளவில் கிடைக்குமாறு செய்துள்ளோம். 

மற்றொரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமான காசிபூரில் கிட்டத்தட்ட 50 பேருக்கு பாம்புக் கடி பதிவாகியுள்ளது. 

அஸம்கர், பதோஹி, சோன்பத்ரா, மிர்சாபூர், வாரணசி ஆகிய பகுதிகளிலும் பாம்பு கடித்த பல வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT