இந்தியா

ஆதரவு திரட்ட இன்று தமிழகம் வருகிறாா் சசி தரூா்

6th Oct 2022 01:05 AM

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடும் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூா் வியாழக்கிழமை (அக்.6) சென்னை வரவுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் தோ்தல் அக்டோபா் 17-இல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் மூத்த தலைவா்களான மல்லிகாா்ஜூன காா்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனா். இருவரில் மல்லிகாா்ஜூன காா்கேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. சசி தரூருக்கு சொந்த மாநிலமான கேரளத்திலேயே ஆதரவு இல்லாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு சேகரிப்பதற்காக சசி தரூா் வியாழக்கிழமை வருகிறாா். சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு வரும் சசி தரூா், 3.30 மணியளவில் சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

அதைத் தொடா்ந்து 4 மணியளவில் கிண்டியில் உள்ள காமராஜா் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா். அதன் பிறகு, இரவு 8 மணியளவில் சத்தியமூா்த்திபவனில் காங்கிரஸ் மூத்த நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT