இந்தியா

இனி வாட்ஸ்ஆப்பில் வியு ஒன்ஸ் தகவல்களை ஸ்கிரீன்ஷாட்டும் எடுக்க முடியாது

6th Oct 2022 04:02 PM

ADVERTISEMENT


சமூக வலைத்தளங்களில் பலராலும் அதிகம் விரும்பப்படும் வாட்ஸ்ஆப், தனது பயனாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல புதிய மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது.

அந்த வகையில், தற்போது வியு ஒன்ஸ் எனப்படும் ஒரு முறை மட்டுமே பார்க்கும் புகைப்படம் அல்லது தகவல்களை ஸ்கிரீன் ஷாட்டும் எடுக்க முடியாத வகையில் புதிய மாற்றம் பரிசோதனையில் உள்ளது.

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

வாட்ஸ்ஆப் பீட்டா இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவில், ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாமல் செய்திருப்பதற்கு நன்றி. வியு ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் விடியோ அல்லது புகைப்படங்களை இனி பயனாளர்கள் யாரும் ஸ்க்ரீன் ஷாட்டும் எடுக்க முடியாத வகையில் மாற்றம் விரைவில் வருகிறது.

ADVERTISEMENT

இறுதியாக, வாட்ஸ்ஆப், வியு ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்க்ரீன்ஷாட் அல்லது விடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாமல் பாதுகாக்கும் வசதியை உருவாக்கிவிட்டது. இது தற்போது சோதனையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதமே இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. விரைவில் நாம் ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் அறிந்து கொள்ளலாம், தெரிந்து கொள்ளக் கூடாது என்பதைக் கூட முடிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், நிரந்தரமாக புகைப்படம் அல்லது விடியோ இருக்கக் கூடாது என்றால் வியு ஒன்ஸ் என்ற வசதி மிகச் சிறப்பாக பொருந்தும். அதுபோல, வியு ஒன்ஸ் தகவல்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாமல் செய்வது அதற்கான கூடுதல் பாதுகாப்பு என்று பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வியு ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படம் அல்லது விடியோவை யாருக்கும் அனுப்பவோ சேமிக்கவோ முடியாது. ஆனால், பெறுநர், அதனை மற்றொரு செல்லிடப்பேசி கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எனவே, அனுப்பும் போது கவனம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT