இந்தியா

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: கேமராவில் பதிவான அன்பின் அழகிய தருணம்

6th Oct 2022 02:40 PM

ADVERTISEMENT

 

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பங்கேற்றார். சோனியாவின் ஷுலேஸை ராகுல் சரி செய்ததும், நடைப்பயணம் முழுக்க தனது அன்புக்கரங்களால் சோனியாவை அரவணைத்தபடி சென்ற தருணங்களும் கேமராக்களின் கண்களில் தப்பவில்லை.

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், செப். 30-ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்று வருகிறாா்கள்.

இதையும் படிக்க | பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

தசரா திருவிழாவுக்காக அக். 4, 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டிருந்தார். அவரை காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி அக். 3-ஆம் தேதி மைசூருக்கு வருகை தந்தாா். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் குடகு மாவட்டத்தில் உள்ள தனியாா் விடுதியில் இருநாள்களுக்கு தங்குவதாக இருந்தது. ஆனால், அங்கு தட்பவெப்பம் சீராக இல்லாததால், மைசூரில் உள்ள தனியாா் விடுதியில் சோனியா காந்தி தங்கியிருந்தார்.

இதனிடையே, தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே வட்டம், பேகூா் கிராமத்தில் உள்ள பீமனகொல்லி கோயிலில் புதன்கிழமை சோனியா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

இருநாள்கள் விடுமுறைக்கு பிறகு, மண்டியா மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்து கொண்டார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாகவே தோ்தல் பிரசாரத்தில் இருந்து சோனியா காந்தி விலகியிருக்கிறாா். நீண்ட நாள்களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன் சோனியா காந்தி பங்கேற்றது காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழி நெடுகிலும் தாய் - மகன் இடையேயான அற்புத அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் பல அழகிய தருணங்களை கேமராக்கள் எடுத்துத்தள்ளின. அவற்றில் சில ..


ராகுல் - சோனியா ஒன்றாக இணைந்து நடத்திய நடைப்பயணத்தின் போது, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பியபடி நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT