இந்தியா

ஜம்மு காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

6th Oct 2022 09:32 PM

ADVERTISEMENT

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 1.62 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியறிக்கை வெளியிட்டுள்ள மாநில மக்கள் தொடர்புத்துறை சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை இல்லாத அளவு சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க |  பாஜகவில் இணைந்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ

முன்னதாக ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் தலமாக மாறி வருவதாகத் தெரிவித்திருந்தார். அவர் பேசும்போது,  “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.56 ஆயிரம் கோடியை ஒதுக்கூடு செய்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

ஆண்டுக்கு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்த ஜம்மு காஷ்மீருக்கு தற்போது 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் இதனால் இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT