இந்தியா

போக்குவரத்து விதிமீறல்: குருகிராமில் ரூ.8.81 கோடி அபராதம் வசூல்!

6th Oct 2022 06:16 PM

ADVERTISEMENT

 

குருகிராமில் ஆகஸ்ட் வரை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத 8 லட்சம் பேரிடமிருந்து ரூ.8.81 கோடி அபராதம் வசூலித்துள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து காவல்துறையின் கூற்றுப்படி, 

குருகிராமில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அதில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டிய 29,548 பேரிடமும், டிரக்டர் தள்ளுவண்டி செலுத்திய 154 பேரிடமும், சட்டவிரோத சைரன்கள் பொருத்திய 72 பேரிடமும், எண் தகடுகள் இல்லாத 17,076 பேரிடமும், நோ எண்ட்ரியில் நுழைந்த 1,267 பேரிடமும், இருக்கையில் அதிகப்பேர் அமர்ந்து சென்ற 3,651 பேர் உள்பட போக்குவரத்து விதிமீறியவர்களிடமிருந்து அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுதவிர, க்யூஆர் கோடு மூலம் ரூ.1.31 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து காவல் ஆணையர் கலா ராமச்சந்திரன் கூறியதாவது, 

காலப்போக்கில் சைபர் சிட்டி காவல்துறையும் ஹைடெக் சிஸ்டம் மூலம் ஆன்லைனில் சவால்விடும் செயலை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், குருகிராமில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் 1100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை காவல்துறை தலைமையகத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் (ஐசிசிசி) இயக்கப்படுகின்றன. 

இனி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக அஞ்சல் சலான்கள் புகைப்படத்துடன் அனுப்பப்படுகின்றன.

குருகிராமில் போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது இடங்களில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம், இதனால் சாலை விபத்துக்களிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றவும், உயிரிழப்பைத் தவிர்க்கவும் அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடவும், சைபர் சிட்டியில் போக்குவரத்தை எளிதாக்கவும், விதிகளை மீறுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags : Gurugram
ADVERTISEMENT
ADVERTISEMENT