இந்தியா

பாஜகவில் இணைந்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ

6th Oct 2022 08:25 PM

ADVERTISEMENT

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்ஷத் ரிபாடியா பாஜகவில் இணைந்தார். 

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டில் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவ்வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரிபாடியா வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தார். குஜராத் பாஜக பொதுச் செயலாளர் பிரதீப்சிங் வகேலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவருடன் ஜூனாகத் மாவட்ட காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர் என பலர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரிபாடியா ராஜிநாமா செய்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன் காங்கிரஸ் தலைமை மக்களுக்கு உதவுவதில்லை என குற்றம்சாட்டினார். 

இதையும் படிக்க | அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு 

மொத்தம் 182 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 111 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 62 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT