இந்தியா

குழந்தை கடத்துவதாக சந்தேகம்: சத்தீஸ்கரில் 3 சாதுக்களுக்கு தர்ம அடி!

6th Oct 2022 03:44 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின்போரில் சாதுக்கள் மூவருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சாதுக்கள் சிலர் தசரா கண்காட்சியில் சில குழந்தைகளிடம் பேசியதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகித்து, சாதுக்கள் மூவரையும் கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியதாக துர்க் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாதுக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் மூவரும் விடுவிக்கப்பட்டனர். 

பாதிக்கப்பட்டவர்கள் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள், ஆனால் அவர்களிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை. விசாரணைக்குப் பிறகு அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

படிக்க: தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பிலாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரோட நகரில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகளைக் கடத்தும் வதந்திகளுக்கு வன்முறை மூலம் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் துர்க் காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : Chhattisgarh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT