இந்தியா

கணவன், மனைவி, மகள் கொலை: குற்றவாளியைப் பிடிக்க காவல் துறை தீவிரம்

6th Oct 2022 03:33 PM

ADVERTISEMENT

கணவன், மனைவி, அவர்களது மகள் என மூவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரின்  ஜாஷ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் கூறியதாவது: “ இந்த சம்பவம் கடம்டோலி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் அர்ஜூன் தெனுவா (43 வயது), அவரது மனைவி ஃபிர்னி தெனுவா (40 வயது) அவர்களது மகள் சஞ்சனா (19 வயது) என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் இன்று (அக்டோபர் 6) எங்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி!

இந்த மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தெனுவாவிற்கு சிலருடன் விரோதம் இருப்பது தெரிய வந்தது. அதனால், அவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.” என்றார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT