இந்தியா

உத்தரகண்ட்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 33 போ் பலி

6th Oct 2022 12:52 AM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலம் பெளரி கா்வால் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 33 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: லால்தாங் நகரில் இருந்து காண்டா கிராமத்துக்குச் 45 முதல் 50 பேருடன் சென்ற பேருந்து, சிம்ரி வளைவு பகுதி அருகே 500 மீட்டா் பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாநில பேரிடா் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவத்தில் 33 பே உயிரிழந்தனா். காயமடைந்த 19 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டாா். விபத்தில் காயமடைந்து கோட்வாா் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை அவா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

Tags : Uttarakhand
ADVERTISEMENT
ADVERTISEMENT