இந்தியா

மேற்கு வங்கத்தில் சோகம்... துர்கா பூஜையின்போது திடீர் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி!

DIN



ஜல்பைகுரி: மேற்குவங்கம் மாநிலம் ஜல்பைகுரி மால் ஆற்றில் துர்கா பூஜையில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 8 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்.

மேற்குவங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் தூர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு பத்து நாள்கள் வழிபாடு நடத்தப்பட்டது.

இதையடுத்து சிலை கரைப்பு நாளான புதன்கிழமை நீர்நிலைகளுக்கு கொண்டுச் சென்று கரைக்கப்பட்டன. 

இந்நிலையில், விஜயதசமி நாளான புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் பூடான் பகுதியில் உள்ள மால் ஆற்றில் சிலைகளை கரைக்கும் போது ஆற்றில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. மால் ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கானோர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர் மற்றும் பலர் காணாமல் போயினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கி இறந்த 8 உடல்களை கைப்பற்றியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் நான்கு பேர் பெண்கள். 

இதுகுறித்து ஜல்பைகுரி எஸ்பி தேபர்ஷி தத்தா கூறுகையில், ஆற்றில் துர்கா சிலை கரைக்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் சிக்கிக் கொண்டதாகவும், பலர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதுகுறித்து ஜல்பைகுரி மாவட்ட ஆட்சியர் மௌமிதா கோதாரா கூறுகையில், “துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை, 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்த 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தேசிய மீட்புப் படையின், போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT