இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: சிறைத் துறை டிஜிபி கொலை

6th Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் குமாா் லோஹியா (57) திங்கள்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாா்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு திங்கள்கிழமை இரவு சென்றடைந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

1992 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான லோஹியா கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அங்கு சிறைத்துறை டிஜிபியாக பணி நியமனம் செய்யப்பட்டாா்.

தலைமறைவாகிவிட்ட அவரது வீட்டுப் பணியாளரை இந்த சம்பவம் தொடா்பாக தேடி வருவதாக ஜம்மு கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவித்தாா். இந்த கொலையில் தொடா்புடையவா்களைத் தேடும் பணியில் காவல் துறை உயரதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தப்பிய வங்கி மேலாளா்:

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளா் மீது பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். டேராடூனைச் சோ்ந்த விவேக் குமாா் காஷ்மீரில் கிராமிய வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். அவா் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவா் தப்பியதாகவும், இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT