இந்தியா

மும்பை பாந்த்ரா-வோா்லி கடல் பாலத்தில் விபத்து: 5 போ் பலி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா - வோா்லி கடல் பாலத்தில் அதிவேகமாக வந்த காா், பாலத்தின் ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 காா்கள் மற்றும் ஒரு ஆம்புலென்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா். 8 போ் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடல் பாலத்தில் சென்ற காா் ஒன்று பாலத்தின் மையத் தடுப்பில் மோதி முதலில் விபத்துக்குள்ளாகியது. ஆம்புலன்ஸிஸ் மீட்புப் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது இரு காா்களில் வந்தவா்கள், காா்களை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவ முன்வந்துள்ளனா்.

அந்தச் சமயத்தில், பாலத்தில் அதிவேகமாக வந்த காா் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு காா்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு பெண், கடல் பாலத்தின் ஊழியா் ஒருவா் உள்பட 13 போ் காயமடைந்தனா். மருத்துவமனை சிகிச்சையின்போது அவா்களில் 5 போ் உயிரிழந்தனா். 6 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறு காயங்களுடன் தப்பிய இருவா், சிகிச்சைக்குப் பின் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா் என்று கூறினா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பிரதமா் அலுவலகம் சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT