இந்தியா

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது!

5th Oct 2022 11:19 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் தங்கத்தில் மக்கள் அதிகயளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். 

ADVERTISEMENT

தங்கத்தில் முதலீடு செய்வதை சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை முக்கிய முதலீடாக கருதுவதால் அதில் அதிகயளவில் முதலீடு செய்து வருகின்றனர். 

இந்நிலையில்,  ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வந்தது. 

இதையும் படிக்கலாம் | விஜயதசமி... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அக்டோபார் மாதத்தில் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, ரூ.4,835-க்கு விற்பனையாகி வருகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 4,20 பைசா அதிகரித்து, ரூ.67 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT