இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய தமிழர்: மீட்புப் பணி தீவிரம்

5th Oct 2022 08:02 AM

ADVERTISEMENT

 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

கங்கோத்ரி மலைத்தொடரில் உள்ள நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் 7 பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் பயிற்சிக்கு நேற்று காலை சென்றிருந்தனர். அப்போது திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த விக்ரம் ராமன் உள்பட 29 மலையேற்ற வீரர்கள் சிக்கினர்.

இவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 4 நகரங்களில் இன்றுமுதல் 5ஜி சேவை!

இதனிடையே இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 21 மலையேற்ற வீரர்களில் 10 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் ராமன் உள்பட 11 வீரர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT