இந்தியா

வங்கியில் ரூ.12 கோடி திருட்டு: கெட்அப்பை மாற்றிய திருடன் சிக்கியது எப்படி?

PTI

மும்பை: தானேவில் மன்படா பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.12 கோடியை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த திருடன் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

புனேவில் கைது செய்யப்பட்ட அல்டாஃப் ஷேக்கிடம் (43) இருந்து ரூ.9 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், அல்டாஃப் ஷேக் கைது செய்யப்பட்டதன் மூலம், அவரது சகோதரி நீலோஃபர் உள்பட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ஆம் தேதி தானேவில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்தது. தனியார் வங்கியில் பாதுகாவலராக இருந்தவர் அல்டாஃப். இவரிடம்தான் வங்கி லாக்கர் சாவிகள் இருக்கும்.

அவர் பல ஆண்டுகாலமாக வங்கியில் பணியாற்றி வந்த நிலையில், திருட்டு எண்ணம் வந்த பிறகு ஓராண்டு காலமாக, வங்கியில் என்னென்ன பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகத் துல்லியமாக செயல்பட்டு பணத்தை திருடியது தெரிய வந்தது.

சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தைத் துண்டித்துவிட்டு, பணத்தை திருடி, அதனை ஏசிக்காகப் போடப்பட்ட துளை வழியாக குப்பைத் தொட்டியில் போட்டு, அதன் மூலம் பணத்தைத் திருடியுள்ளார்.

வங்கியில் உள்ள அலாரத்தை அணைத்துவிட்டு, சிசிடிவி கேமராவை நிறுத்திவிட்டு, வங்கி லாக்கரைத் திறந்து பணத்தை எடுத்து ஏசி துளை வழியாக வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.

மறுநாள் வங்கி வழக்கம் போல இயங்கியபோதுதான், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்தது. அப்போது பாதுகாவலர் அல்டாஃப் மாயமானதும் அவர் மீது சந்தேகம் திரும்பியது.

விசாரணையில், அவரது சகோதரி வீட்டில் சிறிது பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சகோதரியும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் திங்கள்கிழமை அல்டாஃப் கைது செய்யப்பட்டுளள்ர். அவரிடமிருந்து 9 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விரைவில் 12 கோடி மீட்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

முன்னதாக, தனது முழுத் தோற்றத்தையே மாற்றிக் கொண்ட அல்டாஃப், வெளியிடங்களுக்குச் செல்லும் போது புர்கா அணிந்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தானே மற்றும் நவி மும்பை காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல்  வேட்டையில் அல்டாஃப் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT