இந்தியா

ஹிமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

DIN

ஹிமாச்சல் மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

இவ்விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2017ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. 

247 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,470 கோடிக்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைத்துள்ள பிரதமர் மோடி, ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றுகிறார்.

மேலும், குலு பகுதியில் தசரா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT