இந்தியா

நாட்டில் புதிதாக 2,468 பேருக்கு தொற்று!

5th Oct 2022 10:49 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2,468 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,01,934 ஆக உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,318 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,280 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,39,883 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,318 ஆக உள்ளது. 

இதையும் படிக்க | செப்டம்பரில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டியது!

ADVERTISEMENT

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 17 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,733 ஆக உயர்ந்துள்ளது, இதில் கேரளத்தில் மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.19 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,18,83,40,816 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 2,90,216 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT