இந்தியா

குஜராத், மும்பையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.317 கோடியைத் தாண்டியது!

DIN


சூரத்: குஜராத் மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.316 கோடியே 98 லட்சத்தை எட்டியதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பாஜக ஆளும் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஆம்புலன் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கொண்டு செல்லப்பட்டுவதாக கடந்த மாதம் 29 ஆம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திய போலீசார், அகமதாபாத்-மும்பை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திக்ரி கல்வி அறக்கட்டளையின் ஆம்புலன்ஸை இடைமறித்து சோதனையிட்டனர். அப்போது ஆம்புலன்சில் 6 பெட்டிகளில் இருந்த ரூ.25.8 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளில் ரூ. 2,000 மற்றும் 500 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.25.8 கோடி என சூரத் (கிராமப்புற) காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டவை கள்ளநோட்டுகளா என குழப்பமடைந்த போலீசார், பின்னர் அதில், "ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா" மற்றும் "திரைப்பட படப்பிடிப்பு நோக்கத்திற்காக மட்டும்" என்று அச்சிடப்பட்டிருந்தன, இது அதிகாரிகளை தவறாக வழிநடத்தும் செயல் என்று கூறிய காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர். 

இந்நிலையில் பல்வேறு நகரங்களில் கிளைகளுடன் கூரியர் நிறுவனத்தை நடத்தி வரும் முக்கிய குற்றவாளியான விகாஸ் ஜெயின் மும்பையில் கைது செய்யப்பட்டார். மும்பை, ஆனந்த், சூரத் மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களில் பல்வேறு இடங்களில் இருந்து கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கள்ளநோட்டுகளுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹிதேஷ் கொட்டாடியா என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை ஜெயின் பெற்று, குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளைகளுடன் நடத்தி வரும் தனது கூரியர் சேவை மூலம் மும்பைக்கு கொண்டு செல்வது வழக்கம். மகாராஷ்டிரம் தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடோனில் அவர் கள்ளநோட்டுகளை மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஓட்டுநரிடன் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளநோட்டு வழக்கில் மூளையாக செயல்பட்ட விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் அங்காடியா நிறுவனத்தின் உரிமையாளர் விகாஸ் ஜெயின் எனவும், தனது சக குற்றவாளிகளின் பெயர்களையும் ஹிதேஷ் தெரிவித்தார். 

இதையடுத்து மும்பையில் வைத்து விகாஸ் ஜெயினை போலீசாரால் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை ஹிதேஷ் பர்சோத்தம் பாய் கோடாடியா, தினேஷ் லால்ஜி பாய் போஷியா, விபுல் ஹரிஷ் படேல், விகாஸ் பதம் சந்த் ஜெயின், தினாநாத் ராம்நிவாஸ் யாதவ் மற்றும் அனுஷ் வீரேந்திர சர்மா ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை, ஆனந்த், சூரத் மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களில் பல்வேறு இடங்களில் இருந்து கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் இருந்து மட்டும் மொத்தம் ரூ.227 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும், ஓட்டுநர் ஹிதேஷ் வீட்டில் இருந்து ரூ.52 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜெயின் கள்ளநோட்டு சப்ளை செய்துள்ளார். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு நல்ல இந்திய ரூபாய் நோட்டுகளாக அனுப்புகிறார்கள், அவர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஒரு அறக்கட்டளைக்கு பணத்தை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்களை ஏமாற்ற சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்காக அவரைத் தொடர்புகொள்பவர் அல்லது ஏதாவது செய்ய விரும்பினால், அவர் அவரிடமிருந்து பணத்தைப் பெறுவார். அவர் நன்கொடைத் தொகையில் பத்து சதவீதத்தை முன்பணமாக எடுத்துக்கொள்வதாகவும், இந்த கும்பல் ராஜ்கோட் தொழிலதிபரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.

இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்பு சூரத்தில் ஆம்புலன்சில் இருந்து கைப்பற்றப்பட்ட 6 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ. 316 கோடியே 98 லட்சத்தை எட்டியுள்ளதாக குஜராத் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அறக்கட்டளையை தவறாகப் பயன்படுத்தி கள்ளநோட்டுகளை நல்லநோட்டுகளாக மாற்றியதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். 

குஜராத் மட்டுமின்றி மும்பை, தில்லி, இந்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் விகாஸ் ஜெயின் நெட்வொர்க்கை அமைத்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT