இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல்: அமித் ஷா

5th Oct 2022 08:18 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியல் தொகுக்கும் பணி நிறைவடைந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். 

ஜம்மு-காஷ்மீரில் மூன்று நாள் பயணமாக அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். இரண்டு நாள்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று பாரமுல்லாவில் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

ADVERTISEMENT

படிக்க | வங்கியில் ரூ.12 கோடி திருட்டு: கெட்அப்பை மாற்றிய திருடன் சிக்கியது எப்படி?

அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர் அடையாள அட்டை தொகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீரில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீரை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தானுடன் பேசவேண்டிய தேவையில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் தான் பேச வேண்டும். பாரமுல்லாவிலுள்ள குஜ்ஜார், பஹாரி, பாகர்வால் மக்களுடன்தான் பேச வேண்டும். காஷ்மீர் இளைஞர்களுடன்தான் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT