இந்தியா

ஏகே 47 வைத்து துர்கா பூஜை கொண்டாட்டம்!

DIN

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் துர்கா தேவி சிலைக்கு பதிலாக ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை வைத்து பாதுகாப்புப் படையினர் வழிபாடு நடத்தினர்.

‘கூர்கா வாஹினி - 1’ (தற்போது ஜார்கண்ட் ஆயுதப் படை) பிரிவை சேர்ந்த வீரர்கள் துர்கா பூஜையின் ஒன்பது நாள்களும் தேவி சிலைக்கு பதிலாக தங்களின் ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டு வைத்து அலங்கரித்து வழிபாடு செய்து தசராவின்போது துப்பாக்கி குண்டு முழங்க ஆயுதங்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நடைமுறை குறித்து தலைமை பூசாரி கூறுகையில்,

‘கூர்கா வாஹினி’ பிரிவில் சிலை வழிபாட்டை கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரிவின் தளபதியாக இருந்த ஒருவர், ஆயுத வழிபாட்டு நடைமுறையை மாற்ற முயன்றார். பூஜைக்காக சிலை கொண்டு வரும்போது வழியிலேயே விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் பலியாகினர்.

அதுமட்டுமின்றி, ‘கூர்கா வாஹினி’ பிரிவு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டது. முகாமில் பரவிய தொற்று நோயால், தளபதி உள்பட பலர் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து நாங்கள் சிலையை வழிபடுவதில்லை.

இந்த நடைமுறை 1880ஆம் ஆண்டு முதல்முதலில் ஆங்கிலேயர்களால் படைப்பிரிவு உருவாக்கப்பட்டபோது தொடங்கப்பட்டது. ஆயுதங்களை வழிபடும் முறை நடைமுறையில் இருந்த காலகட்டங்களில், ‘கூர்கா வாஹினி’ பிரிவை எந்தவொரு தொற்று நோயும் தாக்கியதில்லை என்று கூறினார்.

மேலும், இந்த ஆயுத வழிபாடு நடைமுறை இடையில் சில காலங்கள் நிறுத்தப்பட்ட போது பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்து மீண்டும் ஆயுத வழிபாடு தொடங்கி இன்று வரை தவறாமல் நடைபெறுகிறது.

'கூர்க்கா வாஹினி' படைப்பிரிவு 1947ஆம் ஆண்டிற்கு பின்னர் ‘பிகார் ராணுவ போலீஸ்’ பின்னர், ஜார்கண்ட் ஆயுதப்படை போலீஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் இந்த ஆயுத வழிபாடு நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றார்.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்கள், மாவோயிஸ்ட் பகுதிகளில் பணியமர்த்தல் மற்றும் விவிஐபி பாதுகாப்பிற்காக செல்லும் தங்களின் கணவர் அல்லது மகனுக்காக பிராத்னை செய்கின்றனர். மேலும், இந்த பூஜையின்போது ஆடுகளை துப்பாக்கியால் சுட்டு பலிகொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வழிபாடு குறித்து வீரர் ஒருவர் கூறுகையில், “ஆயுதங்களுக்கு பூஜை செய்வதன் மூலம், எதிரிகளுடனான சண்டையின்போது துல்லியமாக ஆயுதங்களை பயன்படுத்த முடிகிறது. துர்கா தேவியின் அருளும் எங்களுக்கு கிடைக்கிறது” என்கிறார்.

இந்த படைப்பிரிவு, ஜார்கண்ட் ஆயுதப் படையில் மிகவும் திறமை வாய்ந்த பிரிவாக கருதப்படுகிறது. பல்வேறு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்த பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், உயர்அதிகாரிகள் மற்றும் மிகவும் முக்கிய நபர்களின் பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT