இந்தியா

இமாச்சலுக்கு மத்திய அரசு செய்தது என்ன? பிரதமர் மோடி பட்டியல்

5th Oct 2022 03:27 PM

ADVERTISEMENT


இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசினால், 8 மருத்துவக் கல்லூரிகள், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் பகுதியில் ரூ.1,470 கோடி செலவில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிறகு, பிஞ்ஜோர் முதல் நலகார்ஹ் தேசிய நெடுஞ்சாலையை ரூ.1690 கோடியில் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு, ரூ.140 கோடியில் கட்டப்பட்ட அரசு ஹைட்ரேர் பொறியியல் கல்லூரியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால்.. சென்னை மாநகராட்சியின் செம்ம ஆஃபர்

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிலாஸ்பூருக்கு இன்று ஒரே நாளில் இரண்டு பரிசுகள் கிடைத்துள்ளன. ஒன்று மருத்துவ வசதி மற்றொன்று கல்வி. இன்று இமாச்சலப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்டவை என்று கூறினார்.

நாட்டின் மூலைப் பகுதிகளுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில்தான் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முந்தைய அரசு இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதே தவிர பிறகு அதனை மறந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு இமாச்சலில் வெறும் 3 மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. ஆனால் பாஜக ஆட்சியில் 8 மருத்துவக் கல்லூரிகளும் எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமா, இமாச்சலில் தற்போது மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. ஐஐடி, ஐஐஎம் தற்போது எய்ம்ஸ் -பிலாஸ்பூர் அமைந்திருக்கிறது. இவை அனைத்தும் இமாச்சலக்கு பெருமை சேர்க்கின்றன என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT