இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

5th Oct 2022 03:17 PM

ADVERTISEMENT

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் புதன்கிழமை காலை ராணுவ சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய ராணுவ விமானி ஒருவர் பலியானார்.

தவாங் அருகே பயனித்து கொண்டிருந்த சீட்டா ஹெலிகாப்டர் காலை 10:00 மணியளவில் விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக  ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இரண்டாவது விமானி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும், விவரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: விஜயதசமி... கிருஷ்ணகிரியில் எழுத்தறிவித்தல் விழா!

ADVERTISEMENT

விபத்திற்கான காரணத்தை கண்டறிய  நீதிமன்ற விசாரணைக்கு ராணுவம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT