இந்தியா

4 நகரங்களில் இன்றுமுதல் 5ஜி சேவை!

5th Oct 2022 07:42 AM

ADVERTISEMENT

தில்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் இன்றுமுதல் 5ஜி முன்னோட்ட சேவை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

தசரா பண்டிகையையொட்டி இந்த முன்னோட்ட சேவையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. பின்னடைவு இல்லாத இணைப்பையும் நிகழ்நேரத்தில் தரவைப் பகிரும் உயா் தரவு விகிதம், பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் உள்ளிட்டவை நெட்வொா்க் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க்? கடந்து வந்த பாதை!

இந்த சேவை முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் தில்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி நகரங்களில் இன்றுமுதல் ஜியோ நிறுவனம் வழங்கவுள்ளது.

பயனர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக முன்னோட்ட அடிப்படையிலான சேவை வழங்கப்படுகிறது. மக்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், சேவைகள் மேம்படுத்தப்படும். 

தற்போது 425 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள ஜியோ நிறுவனம், 5ஜி சேவையை அளிப்பதன் மூலம் அதிவேக இணையதிறன் உதவியுடன் எண்ம (டிஜிட்டல்) சமூகத்திற்கான மாற்றத்தை விரைவில் எட்டும். இந்த இணைப்பும் தொழில்நுட்பமும் மனித வளத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள உதவும் எனவும் ஜியோ குறிப்பிட்டுள்ளது. 

Tags : 5G Jio
ADVERTISEMENT
ADVERTISEMENT