இந்தியா

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று உயர்வு!

4th Oct 2022 06:43 PM

ADVERTISEMENT

 

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து 81.53 ஆக முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளில் தொடர்ந்து கொள்முதல் போக்கு தொடர்ந்ததால், ரூபாயின் மதிப்பும் உயர்ந்தது வந்தது.

இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், ரூபாயின் உயர்வை அது சிறிதளவு கட்டுப்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் இன்றைய இன்ட்ரா டே டிரேடின் போதும், ரூபாய் ஒரு நாள் அதிகபட்சமாக 81.36 ஆகவும், குறைந்தபட்சமாக 81.66 ஆகவும் இருந்தது. இது இறுதியாக அதன் முந்தைய முடிவில் இருந்து 29 பைசா அதிகரித்து 81.53 இல் முடிந்தது.

முந்தைய அமர்வில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 42 பைசா குறைந்து 81.82 ஆக இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து ரூபாய் அதன் வரலாறு காணாத வீழ்ச்சியிலிருந்து மீண்டது.  அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 590 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால், மூலதனச் சந்தைகளில் நிகர பங்குகளை வாங்குபவர்களாக இருந்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,276.66 புள்ளிகள் உயர்ந்து 58,065.47 ஆகவும், தேசிய பங்குச்சந்தை (நிஃப்டி) 386.95 புள்ளிகள் உயர்ந்து 17,274.30 ஆகவும் முடிந்தது.
 

Tags : Currencies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT