இந்தியா

'கற்கள் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் கையில் மடிக்கணிணி வழங்கியவர் மோடி!'- அமித் ஷா புகழாரம்

4th Oct 2022 07:35 PM

ADVERTISEMENT

கற்களைப் பிடித்த இளைஞர்களின் கையில் கணினி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கியவர் பிரதமர் மோடி என அமித் ஷா புகழ்ந்து பேசியுள்ளார்.  

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் பல்வேறு அரசாங்கத் திட்டங்களிலிருந்து பலன்களைப் பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: 

சமீப மாதங்களில் ஜம்முவிற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், காஷ்மீருக்கு 22 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வந்து சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு சுற்றுலா பெரிதும் பயனளித்துள்ளது.  

இதற்கு முன்னதாக கற்களை எரியும் நிகழ்வுகள் நடந்தது. தற்போது நடக்கிறதா?முன்பு கற்களை கையில் பிடித்த இளைஞர்களுக்கு கணினி மற்றும் வேலை வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். தற்போது நல்ல மாற்றமடைந்துள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்த ஆட்சியாளர்களை கண்டறிந்து நீக்கியுள்ளோம். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT