இந்தியா

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி, 7 பேர் காயம்

4th Oct 2022 09:31 PM

ADVERTISEMENT

 

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற முண்று சக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிதைந்த வண்டியில் இருந்து மேலும் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தானது, டிரக்  கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் இந்த சம்பவம் நடந்தேரியது. இதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஏழு பேர் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல் ஆய்வாளர் எஸ்ஆர் வெகாரியா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மோதலின் தாக்கம் மிகவும் மேசமாக இருந்ததால் வண்டி ஏறக்குறைய நசுங்கிவிட்டது.  சிதைந்த வாகனத்தில் சிக்கிய பயணிகளை மீட்க தீயணைப்புத் துறை குழு வரவழைக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்த பத்து பேரில் பத்து வயது மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும், பெரும்பாலானோர் 40 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து, இது குறித்து முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT