இந்தியா

தில்லியில் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் 4 பேர் கைது

4th Oct 2022 09:37 AM

ADVERTISEMENT

புது தில்லி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பை சேர்ந்த நான்கு உறுப்பினர்களை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.

திங்கள்கிழமை பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) உள்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கொள்ளிடம் சம்பவம்: 5 பேரின் உடல்கள் மீட்பு

இந்நிலையில் நேற்று(அக்.3)  பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT