இந்தியா

500 நாள்களில் புதிதாக 25,000 தொலைபேசி கோபுரங்கள்: மத்திய அமைச்சர்

4th Oct 2022 02:06 PM

ADVERTISEMENT

அடுத்த 500 நாள்களில் 25,000 செல்போன் கோபுரங்களை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் பங்கேற்ற ‘டிஜிட்டல் இந்தியா ‘ தொடர்பான மூன்று நாள் மாநாடு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் அக்டோபர் 1 முதல் 3 வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர்கள், ஆந்திரம், அசாம், பிகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலங்கானா, மிசோரம், சிக்கிம் மற்றும் புதுச்சேரி ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | ஜெ.பி. நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார்? - ப.சிதம்பரம் பதிலடி!

இதில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 500 நாள்களில் புதிதாக 25,000 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT