இந்தியா

எய்ம்ஸ் புறநோயாளிகளின் கவலையைப் போக்க புதிய வசதிகள்

4th Oct 2022 02:00 PM

ADVERTISEMENT

புது தில்லி: புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே ஊழியர்கள் வேலை செய்வதால், புறநோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்டோபர் 16ஆம் தேதி முதல், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக வைத்த வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதலாக 50 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதுபோல, அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கேயே நுழைவுப் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT