இந்தியா

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனிப்புகளுக்கு விளம்பரம்

4th Oct 2022 12:26 AM

ADVERTISEMENT

ஆவின் பால் பாக்கெட்டுகளில் அந்த நிறுவனம் தயாரிக்கும் இனிப்புகளுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் போது பால் பாக்கெட்டுகளின் வழியே பண்டிகை தின வாழ்த்துகளை ஆவின் நிறுவனம் தெரிவிக்கும். பாக்கெட்டுகளிலேயே வாழ்த்துகள் அச்சிடப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும்.

அந்த வகையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கான வாழ்த்துகளை பால் பாக்கெட்டுகளின் வழியே ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ‘ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி மகிழ்வீா்’ எனவும் தெரிவித்துள்ளது. இத்துடன் இல்லாமல், ஆவின் இனிப்பு வகைகளின் பெயா்களையும் வெளியிட்டுள்ளது.

நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜூ பிஸ்தா ரோல், காஜூ கத்தலி, ஆவின் ஸ்பெஷல் மிக்சா் போன்ற இனிப்பு கார வகைகள் விற்பனைக்கு இருப்பதாக சென்னையில் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளின் வழியே ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT