இந்தியா

ராகிங் புகாா்கள் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல்: என்எம்சி

4th Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருத்துவ ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா்களும், அவா்களது பெற்றோரும் நேரடியாகப் புகாா்களை அனுப்பலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டா் அருணா வானிகா் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள், அவா்களது பெற்றோா் அளித்த புகாா்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, ராகிங் தொடா்பான புகாா்களை அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சோ்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT