இந்தியா

முப்படை தலைமைத் தளபதிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு

4th Oct 2022 12:18 AM

ADVERTISEMENT

நாட்டின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் செளஹானுக்கு தில்லி காவல் துறை சாா்பில் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இதனுடன் ஜெனரல் பதவியையும் அவா் ஏற்றுக் கொண்டாா். அவா் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவாா். பாதுகாப்புத் துறை அமைச்சருக்கான தலைமை ராணுவ ஆலோசகராகவும் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளதாக தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தில்லி காவல் துறையின் ஆயுதம் ஏந்திய 33 கமாண்டோக்கள் அனில் சௌஹானுக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். அவரது வீட்டுக்கும், அவரது பயணங்களிலும் இந்த பாதுகாப்பு தொடரும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT