இந்தியா

ராஜஸ்தான்-பாக். ட்ரோன் மூலம் வீசப்பட்ட 3.5 கிலோ ஹெராயின் பறிமுதல்

DIN

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தில் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அந்நாட்டு ட்ரோன் மூலம் வீசப்பட்ட 3.5 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அனுப்கா் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் பறந்துவருவது தென்பட்டது. இதையடுத்து, அதை நோக்கி எல்லை பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். ஆனால், தான் எடுத்து வந்த 4 பொட்டலங்களை வீசிவிட்டு, அந்த ட்ரோன் மாயமானது.

அப்பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் 4 பொட்டங்களும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 3.5 கிலோ எடையுள்ள ஹெராயின் இருப்பது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT