இந்தியா

கெயில் நிறுவனத்தின் தலைவராக சந்தீப் குமார் குப்தா பதவியேற்பு

DIN


புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் (இந்தியா) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் சந்தீப் குமார் குப்தா இன்று (திங்கள்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநராக (நிதி) இருந்த குப்தா, ஆகஸ்ட் 31 அன்று ஓய்வுபெற்ற மனோஜ் ஜெயினுக்குப் மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 2030ஆம் ஆண்டுகளில் எரிசக்தி தேவைகளில், இயற்கை எரிவாயுவின் பங்கு 15 சதவீதமாக, அதாவது இருமடங்காக இருக்கும் என்ற அரசாங்கத்தின் பார்வையுடன் நிறுவனம் இணைந்து பயனிக்கும் என்றார் குப்தா.

கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு, 56 வயதான குப்தாவை, பொது நிறுவனத் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் தேர்வு செய்தது. நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவர் தற்போது பொறுப்பேற்றார்.

வர்த்தக பட்டதாரி மற்றும் பட்டயக் கணக்காளரான சந்தீப் குமார் குப்தா, நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சந்தைப்படுத்தும் நிறுவனமான ஐஓசியில் 31 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றவர். குப்தா  ஐஓசியின் (நிதி) இயக்குநராக ஆகஸ்ட் 2019 முதல் இருந்தார்.

நிதி மற்றும் கணக்கு நடவடிக்கைகளின் முழு வரம்பையும் கையாள்வதில் மிகுந்த அனுபவம் பெற்ற குப்தா, அவர் பதவி வகித்த காலத்தில் இரண்டு நிலையற்ற உலகளாவிய கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் கட்டுப்பாடு நீக்கிய போது அதன் போக்கை திறன்பட கையாண்டவர்.

கெயில் நிறுவனமானது 14,502 கிலோமீட்டர் எரிவாயு குழாய் நெட்வொர்க் கொண்டு நாள் ஒன்றுக்கு 206 மில்லியன் கனமீட்டர் திறன் கொண்ட மிகப்பெரிய எரிவாயு பரிமாற்றம் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமாகும். மேலும் அதன் இயற்கை எரிவாயு குழாய் நெட்வொர்க் 21 மாநிலங்களை உள்ளடக்கியது.

இந்தியாவில் எரிவாயு-பரிமாற்ற நெட்வொர்க்கில் 70 சதவீத பங்கையும், இயற்கை எரிவாயு விற்பனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும் கொண்டுள்ளது கெயில்.

குப்தாவின் பதவிக்காலம் பிப்ரவரி 2026 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT