இந்தியா

இந்தியாவில் அதிக ஊழல் செய்யும் மாநிலம் எது தெரியுமா?

3rd Oct 2022 06:08 PM

ADVERTISEMENT


இந்தியாவில் அதிகம் உழல் செய்யும் மாநிலமாக கர்நாடக அரசு உள்ளதென காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திங்கள் கிழமை இன்று (அக்.2) தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

படிக்கதில்லியில் அதிகரிக்கும் டெங்கு! ஒரு வாரத்தில் 400 பேர் பாதிப்பு

கர்நாடக அரசு விவசாயிகளிடமிருந்து 40 சதவிகிதம் கமிஷன் தொகையைப் பெறுகிறது. விவசாயிகளிடமிருந்து மட்டுமல்லாமல், சிறு - குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கமிஷனைப் பெறுகிறது. 

ADVERTISEMENT

40 சதவிகிதன் கமிஷன் பெறுவது குறித்து ஒப்பந்ததாரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டிலேயே அதிகம் ஊழல் செய்யும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT