இந்தியா

200 ரயில் நிலையங்களை சீரமைக்கத் திட்டம்! அமைச்சர்

3rd Oct 2022 07:16 PM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை இன்று (அக்.3) தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய அவர், நாட்டில் 200 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்ய ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. 47 ரயில் நிலையங்களை சீரமைக்க ஒப்பந்தப் பணிகள் முடிந்துள்ளன. 32 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் அப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT